பிக்பாஸ் சுரேஷ் தாத்தா வீட்டுக்குள் நுழைகிறார் ! ஆரி ரசிகர்கள் அவரிடம் வைத்த கோரிக்கை ..!

எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள், உள்ளே இருக்கும் போட்டியாளர்களை உச்சகப்படுத்தும் விதத்தில், பிக்பாஸ் வீட்டுக்குள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், சுரேஷ் சக்ரவர்த்தியிடம் நீங்கள் எப்போது செல்வீர்கள் என கேட்டபோது தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என அதிர்ச்சி கொடுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாறுவார் என முதல்முதலில் ரசிகர்கள் நினைத்தது சுரேஷ் தாத்தாவை தான். ஆரம்பத்தில் இருந்தே இவர் கொளுத்தி போட்ட விஷயங்கள், மற்றும் குசும்பு தனம் செய்தது பலரையும் கவர்ந்தது. ஆனால் ஒரு நிலையில் உள்ளே போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் இவரை அமைதியான மனிதராக மாற்றியதால், யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பிய கேள்விக்கு, பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு அழைப்பு வரவில்லை என்றும் அழைக்காத போது நான் எப்படி வரமுடியும் என்றும் ஒருவேளை நான் தகுதியற்ற போட்டியாளராக கருதுகிறார்களோ என்றும் பதிவு செய்தார்.