இலங்கைக்கு வந்த ஒருவர், புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பு.

அண்மையில் இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வந்த ஒருவர், புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தொற்று விஞ்ஞானப் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, நிர்ப்பீடனம், கல உயிரியல் தொடர்பான கற்கை பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவிகே உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்போதே குறித்த விடயம் தெரிய வந்துள்ளதாக, வைத்தியசர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
குறித்த வகை கொரோனா வைரஸ் முதன்முதலில் ஐக்கிய இராச்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டதோடு, ஏற்கனவே காணப்படும் வைரஸை விடவும் இதன் பரவல் வீதம் அதிகம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.