சந்திவெளி திகிலிவட்டை இடையே பாலம் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவு.
சந்திவெளி திகிலிவட்டை இடையே புதியபாலம் அமைப்பதற்கான திட்டம்
சந்திவெளி திகிலிவட்டை இடையே பாலம் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று(12) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரனின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் இப்பாலம் அமைப்பதன் மூலம் மட்டக்களப்பு மக்களின் பொருளாதாரத்தினை மேன்படுத்தும் ஒரு பாலமாக இது அமையவுள்ளதாகவும் மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தி விவசாயத்தினையும் விலங்கு வேளான்மையும் மேன்படுத்துவதற்கும் அங்கு பொருத்தமான வளமான விவசாய காணிகளும் மற்றும் கால்நடை வளர்பாளர்களுக்கான நிலங்களும் கானப்படுவது நமது மாவட்டத்திற்கு கிடைத்த பெரும்வளம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
பாலம் தொடர்பான சாத்தியவள அறிக்கைகளின் அடிப்படையில் பாலத்தின் படவரையினை விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் அளவில் முடிப்பது என தீர்மாணிக்கப்பட்டது இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் முன்னெடுக்கவுள்ளனர்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்பு முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் சந்திவெளி திகிலிவட்டை போக்குவரத்திற்கு இருந்து வந்த ஆபத்தான பயணத்தினை நீக்குவதற்காக இயந்திர இலுவைபாதை ஒன்றினை வழங்கிவைத்து மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது
நடைபெற்ற கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் திருமதி கலைவாணி வன்னிசிங்கம் மத்திய நீர்பாசன பணிப்பாளர் நா.நாகரெட்னம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியலாளர் என்.சசிநந்தன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் மற்றும் பாலங்களை பராமரிக்கு உத்தியோகத்தர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.