“மதியாதார் தலைவாசல் மிதியாதே” பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி.

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரேகா, அர்ச்சனா, ரமேஷ், அனிதா, சனம், வேல்முருகன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் ஆரம்பித்த காலத்தில் பலரது கவனத்தைப் பெற்றவர் சுரேஷ் சக்ரவர்த்தி. வயதில் மூத்தவராக இருந்தாலும் தனது அதிரடி யுத்திகள் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டு அவர் “டிவி முன்பாக அமர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவேன்” என்று கூறியிருந்தார். உடனே அவரது ரசிகர்கள் விஜய் டிவிக்கு அவரை அழைக்கும் படி கோரிக்கைகள் கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் அவர் “உங்கள் குரல்கள் கேட்கப்பட்டது பிக்பாஸ் நன்றி” என்று கூறியிருந்தார். எனவே அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் “என்னை மறுபடியும் அவமானப்படுத்தி விட்டார்கள். அவர்களுக்கு நான் வேண்டாமாம். எல்லாம் சரி. மதியாதார் தலைவாசல் மிதியாதே” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.