வவுனியாவில் 290 நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா நகர வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதன் முடிவுகள் பகுதி பகுதியாக வெளியாகி வருகின்ற நிலையில் கடந்த 10 நாட்களுக்குள் 149 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் வவுனியா முதலாம் குருக்குத்தெரு , கந்தசுவாமி கோவில் வீதி , சூசைப்பிள்ளையார் பகுதியில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில வெளியாகிய நிலையில் 290 நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்குள் 2500க்கு மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் 149 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 1200க்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் இன்னும் 1100 நபர்களின் பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் மாத்திரமே காத்திருப்பில் உள்ளன.
காத்திருப்பில் உள்ளவர்களின் பி.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையிலேயே வவுனியா நகரை வழமைக்கு திருப்பும் முடிவுகள் காத்திருப்பதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.