தனியார் பேருந்து நேற்றிரவு விசமிகளால் தீ வைப்பு.

துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து நேற்றிரவு விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலைக்கு (காமன்ஸ்) மேற்படி பேருந்து ஓடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனை பார்க்கும் போது விசமிகளின் கைங்கரியமாகவே தெரிகிறது. பேரூந்து உரிமையாளர்கள் தன்னுடைய வீதியில் மழை காரணமாக வேறு ஒருவரின் வளவினுள் நிறுத்தி வைத்திருந்த வேளை இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
