வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலை பெண்கள் மூவருக்கு கொரணா தொற்று.

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள் மூவர் உட்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று (15.01) மதியம் வெளியாகிய நிலையில், வவுனியா நகரில் 02 நபர்களுக்கும், ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த 03 பெண்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த இரு வாரத்தில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது.