பசறையில் மேலும் இரு கொரணா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
பசறை பிரதேசத்தில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டார்கள்.
பொங்கல் விடுமுறைக்காக
கொழும்பிலிருந்து வருகை தந்தவர்ளென பசறை பொதுசுகாதார பரிசோதகர் வீ.இராஜதுரை தெரிவித்தார்.
குறித்த தொற்றாளர்கள் கோணக்கலை மற்றும், அமுனிவத்த தோட்டங்களைச் சேர்ந்த ஒரு ஆணும், 15 வயதுடைய யுவதியொருவரும் ஆவார்கள்.
இவர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி பசறை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.