வவுனியாவில் பெய்த கன மழையால் பல ஏக்கர் பயிர்கள் அழிவு

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 1808 ஏக்கர் நெற்பயிர்செய்கையும், 1081 ஏக்கர் உழுந்து பயிர்செய்கையும் அழிவடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்
வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் 97 குளங்களின் கீழெ செய்கைபண்ணப்பட்டிருந்த 1808 ஏக்கர் நெர்பயிர்செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், 1081 ஏக்கர் உழுந்து பயிர்செய்கையும் அழிவடைந்துள்ளது. இதேவேளை குறித்த பயிர்களிற்கான காப்புறுதியை செய்திருப்பவர்களிற்கு அதற்கான காப்புறுதிதொகை வழங்கப்படும் என்றார்.
இதேவேளை வவுனியாவில் அனைத்து குளங்களும் வான் பாய்ந்து வருகின்றநிலையில் கனமழை நீடிக்கும் பட்சத்தில் மேலும் பயிர்கள் அழிவடைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.