சிறைச்சாலை காப்பாளர்களாக முப்படைகளில் இருந்து விலகியவர்களை நியமிக்க தீர்மானம்.
முப்படைகளிலிருந்து விலகிய
200 பேர் சிறைப் பாதுகாப்புக்கு
முப்படைகளிலிருந்து சட்ட ரீதியாக விலகிய 200 பேரை சிறைச்சாலை காப்பாளர்களாக உடனடியாக இணைத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
40 வயதுக்குக் குறைந்தவர்களை இந்தப் பதவிக்கு இணைத்துகொள்வதற்கான விண்ணப்பங்கள் பத்திரிகைகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன எனச் சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
போஹம்பறை சிறைச்சாலையில் இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அவர், அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.