கிழக்குமாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விழா.

கிழக்குமாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 2020ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழா விருதுகளுக்கு தெரிவானவர்களுக்கு காசோலைகள் நேற்று (15.01.2021) வழங்கிவைக்கப்பட்டன.![]()

கிழக்குமாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாகாண கலை இலக்கிய விழா வருடா வருடம் நடாத்தப்படுவது வழமையாகும். எனினும் இந்தவருடம் Covid-19 தொற்று காரணமாக மாகாண கலை இலக்கிய விழாவை முன்னிட்டு விருதுகள் மற்றும் ஆக்கத்திறன் போட்டி வெற்றியாளர்களுக்கு காசோலைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு (15.01.2021) கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.


சுகாதார விதிமுறைகளுக்கு அமைய சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ், கலாசார உத்தியோகத்தர் கே.பிரபாகரன், சமூர்த்தி முகாமையாளர் ரி.இருதயராஜா, உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வுகளை மூத்த ஊடகவியலாளரும் அதிபருமான எஸ்.பேரின்பராஜா தொகுத்து வழங்கினார்.
– சதாசிவம் நிரோசன்