உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் துரித கதியில் அனுமதியளிக்க வேண்டும்.
கொரோனா தொற்றுக் காரணமாக முஸ்லிம்கள் உடல் உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றன. எனவே கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் துரித கதியில் அனுமதியளிக்க வேண்டும் என்று யட்டினுவர பிதேச சபை உறுப்பினர் வசீர் முக்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கோரிக்கையில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை தகனம் செய்யும் விடயத்தில்; முஸ்லிம்கள் மனம் நொந்து போய் பெரும் வேதனையில் இருக்கின்றனர். இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையிலும் ஒருவர் உயிரிழந்தால் அடக்கம் செய்ய வேண்டும் என்று குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் தெளிவாக வலியுறுத்தி கூடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலும் மிக முக்கியமான பிரச்சினையாகும்.இதனால் அவர்களுடைய உடல் உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு தமது அன்றாட வாழ்க்கையில் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
இதில் ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால் இது பற்றி அடிக்கடி சிந்தித்து சிந்;தித்து உடல் உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு பாரிய இழப்புக்களை எதிர் நோக்கி வருகின்றன. இந்த இழப்புக்களை தவிர்த்துக் கொள்ளுவதற்காக கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் துரித கதியில் அனுமதி வழங்க வேண்டும் என்பது எம்முடைய கோரிக்கையாகும்.
முக்கியமாக பொருளாதார சம்மந்தப்பட்ட விடயங்களாக எடுத்தாலும் எமது சமூகத்திற்கு மத்தியில் பாரியதொரு சவால் இருக்கிறது. கொரோனாவின் அச்சத்திற்கும் பீதிக்கும் மத்தியிலே நாங்கள் தம் தொழிலைச சரியாக செய்ய முடியாத வகையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி பிரதமர், சுகாதார அமைச்சு அவசரமாகவும் அவசியமாகவும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
இந்தப் பிரச்சினையால் தொழிலை திறன்பட செய்ய முடியாதுள்ளனர்.எத்தனையோ வியாபாரங்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. இன்று கடன் சுமை காரணமாக வங்கிகளில் வரிசைகளில் நிற்கின்றனர்.சீரான முறையில் வியாபாரங்களை செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.குறிப்பாக கொரோனாவால் உயிரிழந்தால் தகனம் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக எந்த விசயத்திலும் சரியான முறையில் கவனம் செலுத்த முடியாத நிலையில் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.
கொரோனா தொற்று என்பது உலகளாவிய பிரச்சினையாகும். உலகத்தில் எல்லா நாடுகளும் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றன. உலக சுகாதார அமைப்பு அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கியுள்ளன.194 நாடுகளில் அடக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இலங்கையிலும் சுகாதார வைத்திய நிபுணர்கள் அடக்கலாம் அல்லது தகனம் செய்யலாம் என்றை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா தொற்று அலைகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து சாதூரியமான முறையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசாங்கம் முஸ்லிம்களுடைய அடக்கம் தொடர்பில் கூடுதல் விரைவான தீர்ப்பை வழங்குமாறு வேண்டு கோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
– இக்பால் அலி