கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் பழமரக்கன்று விநியோக ஆரம்ப நிகழ்வு!

கண்டாவளை பிரதேச செயலகத்தில் பழமரக்கன்று விநியோக ஆரம்ப நிகழ்வு!
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்தில் அந்தப் பகுதிக்கான பழமரக்கன்றுகள் விநியோக ஆரம்ப நிகழ்வு இன்று 18ம் திகதி காலை 10 மணியளவில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் மற்றும் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டிருந்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் வை.தவநாதன் மற்றும் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோர் இன்றையதினம் சம்பிராதயபூர்வமாக பழமரக்கன்று விநியோகத்தை இந்த நிகழ்வில் தொடக்கிவைத்தனர்.
கண்டாவளை பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ராஜவிநோத் மற்றும் 16 கிராமசேவையாளர் பிரிவுகளின் கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.