ரஞ்சனுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க தொடரும் முனைப்புகள் : மனோ
நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் 4 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யக் கூடிய நகர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
அவருக்கு எதிராக கொடுக்கப்பட்ட தீர்ப்பு குறித்து ஆழமான கருத்து பகிர்வுகளும் கலந்துரையாடல்களும் நடைபெற்று வருகின்றன. அத்தோடு இணைய வழி மனுக்களும் ஆரம்பமாகியுள்ளன.
இப்போது அரசியலமைப்பு மற்றும் சட்ட தீர்ப்பு குறித்து பெரும் விவாத களம் ஒன்று பரவலாக நாட்டில் ஏற்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ரஞ்சனுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மறுபரிசீலனை இடம் பெற வேண்டும் எனும் கருத்துகள் நாட்டில் மேலோங்கியுள்ளன.
ரஞ்சன் ராமநாயக்காவுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்கும் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பாதுகாப்பதற்கும் என புதிய அனுகுமுறைகளை கையாளும் முனைப்புகள் பரவலாக அதிகரித்துள்ளன எனத் தெரிய வருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச , ஜனாதிபதி சட்டத்தரணிகளை சந்தித்து பேசவும் , நாட்டில் உள்ள முக்கியமான வழக்கறிஞர்களது உதவிகளை பெற்றுக் கொள்ளவும், அதன்பின் ஒரே குரலில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை குறித்து குரலெழுப்பவும் அவர் கட்சிக்குள்ளும் வெளியிலும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதை ஊர்ஜிதப்படுத்துவது போல மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில்
#ரஞ்சன்_ராமநாயக்க எம்பியை பாராளுமன்ற கூட்டங்களில் சமூகமளிக்க அனுமதிக்குமாறு, இது நீதிமன்ற வரம்புக்கு வெளியே #பாராளுமன்றத்தின் உரிமை என்ற அடிப்படையில், சபாநாயகரை #ஐமச/எதிரணி அதிகாரபூர்வமாக கோரும் என ட்விட் செய்துள்ளார்.
#ரஞ்சன்_ராமநாயக்க எம்பியை பாராளுமன்ற கூட்டங்களில் சமூகமளிக்க அனுமதிக்குமாறு, இது நீதிமன்ற வரம்புக்கு வெளியே #பாராளுமன்றத்தின் உரிமை என்ற அடிப்படையில், சபாநாயகரை #ஐமச/எதிரணி அதிகாரபூர்வமாக கோரும். #lka
— Mano Ganesan (@ManoGanesan) January 18, 2021