மஹிந்த தனிமைப்படுத்தலிலா? வெளியானது உண்மை தகவல்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கொரோனா ஏற்பட்டதாகவோ அல்லது அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவோ வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்காதீப வார இறுதிப் பத்திரிகையில் பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று செய்தி வெளியாகியிருந்தது.
எனினும், அதே பத்திரிகை இன்று அந்தச் செய்தியை திருத்தி பிரசுரித்துள்ளது.
அதற்கமைய பிரதமர் தனிமைப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.