கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றியது சினிமா.

கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றியது சினிமா தான் என்று இயக்குனர் ஆர்வி.உதயகுமார் பட விழாவில் கூறியிருக்கிறார்.
ரேகா புரடக்ஷன்ஸ் சார்பில் சக்ரவர்த்தி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் வெட்டி பசங்க. மஸ்தான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வித்யூத் விஜய், கவுஷிகா நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது, கொரோனா காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றியது சினிமா மட்டும் தான் என்பதை நான் உறுதியாக சொல்வேன்.
எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, அத்தனை தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிட்டதற்காக நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சாவு வீட்டில் குத்துப் பாட்டு போட்டவர் இப்படத்தின் இயக்குநராக மட்டும்தான் இருக்க முடியும்.
இப்படம் அறுசுவையும் சேர்ந்து கலந்து கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன். பொருளாதார ரீதியிலும் வெற்றி ரீதியிலும் இப்படம் வெற்றிப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’இவ்வாறு அவர் பேசினார்.