கொரோனா வைரஸ் தொற்றுக்கான புதிய நோய் அறிகுறிகள்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான புதிய நோய் அறிகுறிகள் தொடர்பிலான தகவல்களை தொற்று நோய் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

வாய் மற்றும் நாக்கு பகுதிகளில் கனதியான கொப்புலங்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நோய் அறிகுறிகளுக்கு ”COVID TONGUE” என பெயரிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கொரோனா வைரஸ் கட்டம் கட்டமாக வீரியம் அடைந்து வரும் அதேவேளை, அதன் நோய் அறிகுறிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கொவிட் டங் நிலைமை மற்றும் வாய் பகுதியில் ஏற்படும் நோய் அறிகுறிகள் தென்படுவது தற்போது அதிகரித்துள்ளதாக கிங்க்ஸ் லண்டன் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

தலைவலி உள்ளிட்ட சிறு நோய் அறிகுறிகள் தென்படுமாயின், இயலுமானளவு சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நோய் அறிகுறிகள் தென்படும் காலப் பகுதியில் சுவை மற்றும் மனம் ஆகியன குறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்;.

எவ்வாறாயினும், இந்த புதிய நோய் அறிகுறிகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரை எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை.

இந்த புதிய நோய் அறிகுறிகள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை அவ்வாறான நோய் அறிகுறிகளை கொண்ட எந்தவொரு நோயாளரும் அடையாளம் காணப்படவில்லை என தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்று ஏற்பட்டமைக்கான நோய் அறிகுறிகள்

01.காய்ச்சல் மற்றும் உடல் உஷ்ணம் அதிகரித்தல்
02.வரட்டு இருமல்
03.தொண்டை வலி
04.சுவாசிக்க சிரமமாதல்
05.மூக்கு பாரமாக இருப்பதை போன்ற உணர்வு
06.நெஞ்சுவலி

Leave A Reply

Your email address will not be published.