பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கேபிடல் கட்டிடம் மூடப்பட்டது
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கேபிடல் கட்டிடம் மூடப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு பிடனின் பதவியேற்புக்கான ஒத்திகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் பாதுகாப்பு பாதுகாக்கப்பட்டுள்ளதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
கேபிடல் கட்டிடத்திற்குள் உள்ள அனைவருக்கும் போலீசார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் உள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் பதவியேற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
டிரம்ப் சார்பு குழுக்களால் அமெரிக்க பிரதிநிதிகள் சபை மீது ஜனவரி 6 தாக்குதல் நடத்தப்பட்டதாக அறியப்பட்டதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.