பாடசாலை மாணவா்களுக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பாடசாலை மாணவா்களுக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நெடுந்தீவினை சோ்ந்த தற்போது கனடாவில் வசித்து வரும் ஆறுமுகம் குகன் அவா்கள் தனது மகள் காவியாவின் பிறந்த நாளினை முன்னிட்டு நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் ஊடாக 14 மாணவா்களுக்கு நெடுந்தீவில் ஒரு மாணவருக்கு தலா ரூபாய் 2,000.00 வீதம் 28,000.00 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தாா்.
கடந்த 17ம் திகதி நெடுந்தீவு நண்பா்கள் வட்டத்தின் அங்கத்தவா்கள் இணைந்து மாணவா்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று நேரடியாக வழங்கியதுடன் கல்வி விழிப்புணா்வு பெற்றோா்களுக்க மேற்கொள்ளப்பட்டது.
நெடுந்தீவில் காணப்படும் 07 ஆரம்ப பாடசாலைகளிலும் உண்மையான தேவையுடைய இரண்டு மாணவா்கள் வீதம் தோ்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புலம் பெயா் தேசத்தில் வாழ்ந்தாலும் தாயக மண்ணில் வசிக்கும் மாணவா்களின் கல்வியில் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பாிசில் பாிட்சையில் சித்தியடைகின்ற மாணவா்களுக்கு வருடந்தோறும் 50,000.00 பெறுமதியினை ஆறுமுகன் குகன் அவா்கள் தனது தந்தையாா் பெயாில் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.