அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு : அரசியல் தீவிரவாதம், வெள்ளை இனவாதம் முறியடிப்போம்-பைடன்
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த, தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட கமலாதேவி ஹாரிஸ் பதவியேற்றனர்.
2020ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஆட்சியை பிடிக்க குறைந்தது 270 வாக்குகள் தேவை. பிடனுக்கு 306 வாக்குகளும், டிரம்பிற்கு 232 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் டிரம்ப் இதை ஏற்க மறுத்தார்.
ஜனவரி 20ம் தேதியான இன்று, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்.
அமெரிக்க ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் ஜோ பைடன்.