கிறிஸ்தவ தலைமைத்துவம் அச்சமின்றி தைரியமாகப் பேசும் :கர்தினால் மல்கம் ரஞ்சித்
கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்ட கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ‘எந்த சக்தியாலும் தன்னை மௌனிக்கச் செய்ய முடியாது’ என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“சரியானதையும் பிழையானதையும் செய்வதற்கு எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதோ, எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதோ, எந்த இனத்தை சேர்ந்தவர் என்பதோ முக்கியமல்ல. சரியானதை செய்வதே அவசியம். மனசாட்சி படிப்படியாக மரணிப்பதே இங்கு இடம்பெறுகின்றது.
உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள். சத்தமிடுவதால் உண்மை பொய்யாகி விடாது. கிறிஸ்தவ தலைமைத்துவம் என்பது அச்சமின்றி தைரியமாகப் பேசும். நான் மரணத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்து வருவதாகவும் எந்த சக்தியாலும் என்னை மௌனிக்கச் செய்ய முடியாது.
நாட்டின் வளங்கள் வீணடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களின் மனிதாபிமான முன்னேற்றத்தை பாதுகாப்பதற்காக குரல் கொடுக்க வேண்டியது தலைமைத்துவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள்” எனவும் கூறினார்.