கட்டுநாயக்கா விமானம் நிலையத்தில் ஓமான் விமானம் முதலாவதாக தரையிறங்கியது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் ஓமான் விமானம். நீர் பீச்சியடித்து வரவேற்பு

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட விமான நிலையம் 10 மாதங்களுக்கு பின் இன்று (21 ) மீள
சகல பயணிகளுக்குமாக கட்டுநாயக்க விமான நிலையம், மத்தள விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி இலங்கையர்களை ஏற்றிய முதலாவது விமானம் Oman Air WY – 371 ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து 50 இலங்கையர்கள் குறித்த விமானம் கடடுநாயக்க விமான நிலையத்தில் 7.30am இற்கு தரையிறங்கியது. விமானத்திற்கு நீர் பீச்சியடித்து Water salutes வரவேற்பளிக்கப்பட்டது.

விமானத்தில் வருகைதந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் வணிக விமானம் மூலம் வருகை தந்தனர். இதுவரை காலமும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் விசேடமாக அழைத்துவரப்பட்டனர். இனி குறைந்த கட்டணங்களில் வரமுடியும்.

சுற்றுலா விசா, குடியுரிமை விசா மற்றும் முதலீட்டாளர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை விசாக்களை Tourist Visa, Resident Visa, Investors , Dual Citizens பயன்படுத்தி இலங்கைக்கு வரலாம்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் ஒன்லைனில் விசா வழங்கப்படும்

சுமார் 15 விமானங்கள் இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளன.

 

Leave A Reply

Your email address will not be published.