கிளிநொச்சி கந்தன்குளம் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. மக்கள் அவதானம்.

கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் கிராம சேவகர் பிரிவில் விநாயகபுரத்துக்கும் செல்வா நகருக்கும் மத்தியிலுள்ள கந்தன் குளத்தில் சிறு கசிவு ஏற்பட்டுள்ளதனால் அதனை இப்போது கிராம மக்கள் கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் இராணுவத்தினர் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவியுடன் சீர் செய்து வருகின்றார்கள்.
எனினும் கந்தன் குளத்தின் கீழ் பகுதியில் இருக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்.