வவுனதீவில் சோளம் அறுவடை தின விழா.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சோளம்,செய்கையின் அறுவடை விழா மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தில் நடைபெற்றது.
காலநிலைக்கு சீரமைவான விவசாயத் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சோளம், செய்கையின் அறுவடை விழா மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தின் ஆயித்தியமலை முள்ளாமுனை கிராமத்தில் இந் நிகழ்வு வியாழக்கிழமை (21) விவசாயத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
விவசாய போதனாசிரியர் கே. லிங்கேஸ்வரன் ஒழங்கமைப்பின் கீழ்
மண்டபத்தடி வலய விவசாயப் பிரிவின் உதவி விவசாயப் பணிப்பாளர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா கலந்து சிறப்பித்தார்
மேலும் இந் நிகழ்வில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு அதிகாரி ரவிராஜ், பயிர் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் விவசாய உத்தியோகத்தர்கள், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் விவசாயிகள் என பபரும் வருகைதந்திருந்தனர்
இதன்போது சோளம்,நிலக்கடைலை போன்ற விவசய உற்பத்திகள் அறுவடை செய்யப்பட்டது.