இன்று நுவரெலியா பகுதியில் மிதமான நிலநடுக்கம்.

நுவரெலியாவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நுவரெலியா வலப்பனை பிரதேசத்தை அண்மித்த பகுதியிலேயே இவ்வாறு சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றம் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.
ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக குறித்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வியலுவ எகிரிய கிராமத்திலும் குறித்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.