சீனாவில் அடுத்தகட்ட சாதனை யாக அதிவேக மிதக்கும் ரயில் அறிமுகம்.
சீனாவில் அடுத்தகட்ட சாதனை யாக அதிவேக மிதக்கும் ரயிலை அறிமுகம் செய்துள்ளனர். காந்த இயக்கவியல் அடிப்படையில் இயங்கும் இந்த ரயில் மணிக்கு 620 கி.மீ வேகத்தில் பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு ஜியோ தாங் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் இந்த ரயிலை வடிவமைத்துள்ளனர்.
உயர் வெப்ப high temperature superconducting தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ரயில் தாண்டவாளங்களில் தொட்டுச்செல்லாமல் மிதந்தபடி அதிவேகமாகப் பயணிக்கக் கூடியது.
இந்த ரயிலில் சக்கரங்கள் இல்லாததால் உராய்வு மிகவும் குறைவாகவே இருக்கும். காந்தமயப்படுத்தப்பட்ட தாண்ட வாளத்தின் மீது இந்த ரயில் காற்றில் மிதந்தபடி வேகமாகப் பயணிக்கும்.
தற்போது இதன் 69 அடி நீள மாதிரியை அறிமுகப்படுத்தி உள்ள ஆராய்ச்சியாளர்கள், அடுத்த மூன்று முதல் 10 ஆண்டுகளுக்குள் இது முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனக் கூறியுள்ளார்கள். இந்த ரயில் மணிக்கு 620 கிமீ வேகத்தி பயணிக்கக் கூடியது. இதன் மூலம் பயணித்தால் லண்டனிலிருந்து பாரீஸுக்கு 47 நிமிடங்களில் போய்விடலாம்.
இந்நிலையில் மேலும் இந்த ரயிலை மணிக்கு 800 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கும் முயற்சிகளையும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.