தேனீ இணைய தள ஸ்தாபகர் ஜெமினி காலமானார்

தேனீ இணைய தளத்தை நடத்தி வந்த க.கங்காதரன் (ஜெமினி) இன்று காலை மறைந்தார்.
கடந்த பல மாதங்களாக உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , தேனீ இணையதள ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான ஜெமினி என்று அழைக்கப்படும் க.கங்காதரன் இன்று (22.01.2021 )ஜெர்மனியில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
புலம்பெயர் தேசத்திலிருந்து சமூக அக்கறையுடன் செயற்பட்டு கடந்த 40 வருடங்களாக தேனீ இணையத்தளத்தினை நடத்தி வந்தார்.
அவர் கடந்த மார்ச் மாதம் கொரனோ தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் தேனீ இணையத்தளமும் மௌனித்துக் கொண்டது.
இணையத்தள செயற்பாடுகளில் தளராத துணிவுடன் போராடிய ஒரு சமூகப்போராளியை இழந்து நிற்கின்றோம்.
தொடர்ந்து நோயுடன் போராடிய அவர் இன்று காலை ஜெர்மன் வைத்தியசாலையில் காலமானார்.
– ரஜனி