ரஞ்சனை விடுவிக்க டயானா களத்தில்

நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலைக்காக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தலையிட்டு செயல்பட உள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதியால் மன்னிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய ஊவதென்ன சுமன தேரோவுக்காக, டயானா கமகே இறங்கி தனக்கு ஜனாதிபதியிடம் பொது மன்னிப்பை பெற்று தந்தார் என பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் டயானா கமகே மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இருவரும் கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருவரும் ஒன்றாக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர டயனா அரச தரப்போடும் மிக நெருக்கமான தொடர்புகளை பேணுபவராக உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.