சசிகலா உடல்நிலையை குறித்து மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு தகவல்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நுரையீரல் தொற்றால் அதிக பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்வெளியாகி உள்ளது.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமாக நபராக இருந்தது சசிகலா. சொத்து வழக்குகள் காரணமாக கர்நாடக மாநிலத்தின் சிறையிலடைக்கப்பட்டார்.
வருகிற 27ம் தேதியிலிருந்து சசிகலா சிறையிலிருந்து விடுதலை செய்வதாக தகவல்கள் வெளியாகின. தற்போது பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனை சசிகலாவின் உடல்நிலையை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.
திடீரென்று சசிகலாவிற்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நுரையீரல் மிக பாதிப்பு அடைந்துள்ளதாகவும் மருத்துவ தரப்பிலிருந்து தகவல் வெளியாகியது.
கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலாவிற்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாகவும், நுரையீரலில் சளி அதிகமாக இருப்பதாகவும் இதனால் தற்போது இவருக்கு கடுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் நேற்று வரை 75 சதவீத ஆக்சிஜன் கொடுத்து வந்த நிலையில் தற்போது அவருக்கு 95 சதவீத ஆக்ஸிஜன் கொடுத்துவருவதாகவும் தற்போது சசிகலாவிற்கு தொடர்ந்து உடல்நிலையை தீவிரமாக கண்காணிக்க படுவதாகவும் மருத்துவ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்பார்த்தபடி சசிகலா விடுதலை பெற்றால் தமிழ்நாட்டு அரசியலில் பெறும் மாற்றம் ஏற்படும். ஆனால் தற்போது உடல்நிலை பாதிப்பால் அரசியலில் கால் பதிப்பது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.