சபையில் சுயாதீனமாகச் செயற்பட ஆளுங்கட்சி பிரபல எம்.பி. முடிவு?

ராஜபக்ச அரசில் அங்கம் வகிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான தீர்மானத்தை எடுக்கவுள்ளார் எனத் தகவல்கள் பரவி வருகின்றன.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தற்சமயம் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருடன் நெருக்கமாகக் கலந்துரையாடியுள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்துக்குள் இவ்வாறு இருவரும் கலந்துரையாடியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்தக் காரணத்துக்காகச் சுயாதீனமாகச் செயற்படவுள்ளார் என்கின்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.