அநுராதபுர சிறையில் முதலாவது கொவிட்-19 தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்ட இக்கைதிக்கு கடந்த 23ஆம் திகதி அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கைதி களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
பின்பு இக்கைதிக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்பு அவர் மெத்சிரி செவன கொரோனா சிகிச்சை நிலையப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மற்றொரு சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.