வடக்கு கிழக்கு மக்கள் பிரச்சினை: யோஷிதவுடன் சாணக்கியன் பேச்சு.

வடக்கு கிழக்கு மக்கள் பிரச்சினை:
யோஷிதவுடன் சாணக்கியன் பேச்சு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் அலுவலகப் பிரதானியான யோஷித ராஜபக்சவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து யோஷித ராஜபக்ச தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு, கிழக்கு ஒத்துழைப்பு மற்றும் சமூக- பொருளாதார முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் தொடர்பில் ஆராயப்பட்டன என்று குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.