கடற்படை வசமுள்ள காணியை மீட்டுத்தரக் கோரி முறைப்பாடு!

கடற்படை வசமுள்ள காணியை மீட்டுத்தரக் கோரி முறைப்பாடு!
கடற்படை வசமுள்ள தங்களுடைய காணிகளைப் பெற்றுத் தருமாறு கோரி தீவக மக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 11 மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்திலுள்ள தீவகத்துக்கான கடற்படைக்கான பிரதான முகாம் அமைந்துள்ளது.
அந்தப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணிகள் கடற்படை வசமுள்ளது எனக் காணி உரிமையாளர்களால் யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த முப்பது வருடங்களாகக் குறித்த காணிகள் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என மக்கள் கூறியுள்ளனர்.
குறித்த காணிகளைச் சுவீகரிப்பதற்குரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளர்கள் தமது காணிகளைப் பெற்றுத் தருமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.