இலங்கையில் 59 ஆயிரத்தைக் கடந்தது கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை! – இன்றும் 737 பேர் அடையாளம்

இலங்கையில் இன்றும் 737 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 55 ஆயிரத்து 288 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
நாட்டில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 288 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றாளர்களில் 50 ஆயிரத்து 337 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 547 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.