சமிக்ஞை விளக்குகள் வீதிகளுக்கு பொருத்த ஒருங்கிணைப்பு குழு பரிந்துரை.
யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவிற்குள் புதிய வீதி சமிஞ்ஞைகள் பொருத்த பரிந்துரை.
யாழ் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி வீதி கே.கே. எஸ் வீதி சந்தி, ஸ்ரான்லி வீதி மணிக்கூட்டுவீதி சந்தி, கஸ்தூரியார்வீதி நாவலர்வீதி சந்தி, இலுப்பையடி சந்தி, கொழும்புதுறை வீதி – பழைய பூங்கா வீதி சந்தி போன்ற இடங்களுக்கான புதிய வீதி சமிஞ்ஞைகள் பொருத்துவதற்கான பரிந்துரை செய்யப்பட்டள்ளது.
அதற்கான முடிவுகள் பெப்ரவரி 2ஆம் திகதி யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.