‘சூரரைப் போற்று’ ஆஸ்கர் போட்டியில் ….மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்
சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது சூரரைப்போற்று திரைப்படம். கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது. ஏதார்த்தமான மனிதர்களின் அசாதாரண கனவுகளை நனவாக்க எடுக்கும் முயற்சிகள் எவ்வளவு கடினமானது என்பதை சூர்யாவின் நடிப்பு கண்முன் காட்டியது.
இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம்பெறவேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள்.இந்தப் பொதுப்பிரிவுப் போட்டியில் ‘சூரரைப் போற்று’ திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறையில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்த பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள். உலக திரையுலகினரின் பாராட்டுகளை அள்ளிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்” என்று கூறினார் படத்தின் இனை தயாரிப்பாளர் இராஜ்சேகர் கற்ப்பூரசுந்தரபாண்டியன்.