வவுனியாவில் இனந்தெரியாத நபர்களால் வீடு எரிப்பு.

வவுனியா இராசேந்திரங்குளம் பகுதியில் இனம் தெரியாத நபர்களால் வீடு ஒன்று எரிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
குறித்த நபர் நேற்றயதினம் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது அவரது வீடு தீப்பற்றி எரிவதை அவதானித்ததுடன், அயலவர்களிற்கும் தெரியப்படுத்தினார்.விரைந்துவந்த அயலவர்கள் வீட்டின் தீயை அணைத்திருந்தனர்.
சில விசமிகளால் தனது வீடு எரிக்கப்பட்டுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளர் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.