ஜெயலலிதாவின் நினைவிடத்தை மக்கள் பார்வைக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை மக்கள் பார்வைக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
80 கோடி மதிப்பீட்டில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் துணை முதல்வர், அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.