கொரோனா தடுப்பூசி மருந்துகள் இலங்கை வந்து சேர்ந்தன.
கொரோனா தடுப்பூசி மருந்துகள் இலங்கை வந்து சேர்ந்தன.
இந்தியத் தூதுவரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
நாளை முதல் ஆறு வைத்தியசாலைகளில் முதற்கட்ட தடுப்பூசியேற்றல் ஆரம்பம்.
முதலில் சுகாதாரத் துறையினர், முப்படையினர், அதற்குப் பின்னர் பின்னர், மூன்றாவது குழுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாட்பட்ட மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு, இந்த தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு எவரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னார்வ அடிப்படையிலேயே இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. எனினும் தடுப்பூசிகள் பற்றி பரப்பப்படும் உறுதியற்ற வெறும் பேச்சுக்களை நம்பாமல், தகுந்த மருத்துவ அறிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு கிடைக்கிற வாய்ப்புக்களில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுங்கள்.
தடுப்பூசியை பெற்றுக்கொள்கின்றவர்களிடம் இருந்து ஒப்புதல் படிவம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டு பெற்றுக் கொள்ளப்படும் என்றும் என்று இந்த பணிக்குழு அறிவித்துள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய வைத்தியசாலை, கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு போதனா வைத்தியசாலைகள், ஹோமாகமை, முல்லேரியா, ஐ.டி.எச் முதலான வைத்தியசாலைகள் இந்தப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.
இவ்வாறாக பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு இணையாக, மத்திய ஒளடத களஞ்சியத்தின், நாடுமுழுவதும் உள்ள 26 பிரதேச களஞ்சியங்களுக்கும் தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும்.
தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதன் பின்னர், உடனடியாக அடுத்த வாரம் முதல், ஏனைய வைத்தியசாலைகளிலும், பணிக்குழாமினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்த ஐந்து லட்சம் Oxford Astrazeneca தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக, சீனாவின்னன்பளிப்பாக மூன்று லட்சம் Sino Pharma தடுப்பூசிகளும் அடுத்த வாரமளவில் இலங்கைக்குக் கிடைக்கப்போகின்றன.