பிரான்ஸ் நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு தொற்று எண்ணிக்கை.

பிரான்சில் தலைவிரித்தாடும் கொரோனா! நிரம்பி வழியும் அவசர சிகிச்சை பிரிவுகள்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு தொற்று எண்ணிக்கையும், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகநாடுகளின் வரிசையில் பிரான்ஸ் அதன் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் 6வது இடத்திலும், இறப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் 7வது இடத்திலும் உள்ளது.

அந்நாட்டில் இதுவரை 3,057,857 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 73,494 பேர் பலியாகியுள்ளனர்.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 4,240 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, மற்றும் இறப்பு எண்ணிக்கை 445-ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், பிரான்சில் திங்கட்கிழமை வரை 1,092,958 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 2 சதவீதத்தை கூட பூர்த்தி செய்யவில்லை.

Leave A Reply

Your email address will not be published.