கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்.
கொரோனா தடுப்பூசி வழங்குவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்: கல்வி அமைச்சர் பீரிஸ்
கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பல பாடசாலைகளில் கற்றல் தூர இடைவெளி மற்றும் சுகாதார வசதிகளை சோதனை செய்யும் விஜயத்தின் போதே அவர் இதைக் கூறினார்.
தடுப்பூசிப் பிரசாரத்தில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிப்பது அவர்களது பணியின் தன்மை காரணமாக நியாயமானது என்றும் இது தொடர்பில் தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.