“திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் இடுவதன் காரணங்கள்”

“திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் இடுவதன் காரணங்கள்”

இறைவழிப்பாட்டில் மிக முக்கியமானது, எந்தெந்த கோவிலுக்கு சென்றாலும், திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவை நெற்றியில் இடுவதற்கு கொடுக்கப்படுகிறது. திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் இடுவது ஏன் என்று இங்கு பார்போம்.

திருநீறு

திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வது வழக்கம். மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் பயன்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

சந்தனம்

சந்தனம் மூளைச்சோர்வை நீக்குகின்றது. சந்தனத்தை இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்றபோது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்களை பதிவு செய்து வைத்திருக்கும் மூளைப் பின்புற மேடு என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த மூளையின் முன் புறணி சிறப்பான முறையில் தொழிற்படும்.

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டு விரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவு பெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க சந்தனம் சரியான மருந்து.

குங்குமம்

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். மனிதன் அதிகமாக சிந்திக்கும்போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி, தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும்.

இதை தடுக்க நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம். இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. நமது உடலும் மனதும் நிலைபெறவே இறைவழிபாட்டை மேற்கோள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.