இலங்கையில் இதுவரை 37,825 பேருக்கு கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றல்!

இலங்கையில் இதுவரை 37 ஆயிரத்து 825 பேருக்குக் கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
நேற்று 5 ஆயிரத்து 286 பேருக்கும், இன்று 32 ஆயிரத்து 539 பேருக்கும் கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா கொரோனாத் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் நேற்று தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது.