புத்தளம் கொழும்பு வீதி ரத்மல்யாய பகுதில் இடம்பெற்ற விபத்து.

புத்தளம் கொழும்பு வீதி ரத்மல்யாய பகுதில் இடம்பெற்ற விபத்து.
புத்தளம் கொழும்பு வீதி ரத்மல்யாய பகுதியில் அரை சொகுசு பஸ் மற்றும் டாடா கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து அவ்விடத்திலிருந்து பஸ் ஓட்டுனரும் நடத்துனரும் தப்பியோடியமை குறிப்பிடத்தக்கது.
டாடா கனரக வாகனத்தின் சாரதிக்கு மாத்திரம் காயங்கள் ஏற்பட்டுள்ளது. சாரதியை புத்தளம் தள வைத்தியசாலையில் அப்பிரதேச மக்கள் அனுமதித்துள்ளனர்.
இப்பேருந்து கொழும்பு நோக்கிய பாதையில் பயணிகள் அற்ற நிலையில் வந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.