நுவரெலியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

நுவரெலியா வலப்பனை பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 2.59 மணியளவில் நில நடுக்கம் உணரப்பட்டதாகவும், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.0 ஆக பதிவாகியுள்ளதாகவும் குறித்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.