கொரணா கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 24 உணவகங்கங்கள் மூடப்பட்டது.

பரிசில் கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 24 உணவகங்கங்கள் மூடப்பட்டுள்ளதாக வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

சுகாதார கட்டுப்பாட்டுக்களை மீறி செயற்கட்ட காரணத்துக்காக இந்த உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மாலை 6 மணிக்கு பின்பு ஊரடங்கு நேரத்தில் உணவகத்தை திறந்து வைத்திருந்தது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உணவவினை மேசையில் வைத்து உண்ண கொடுத்தது போன்ற காரணங்களுக்காக காவல்துறையினர் அவ் உணவகங்களை மூடியுள்ளனர்.

இந்த உணவகங்கள் அடுத்த 15 நாட்களுக்கு திறக்கப்பட மாட்டாது என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

பரிசில் நாள் ஒன்றில் சராசரியாக 300 இல் இருந்து 400 உணவகங்கள் காவல்துறையினரால் சோதனையிடப்படுகின்றன. கடந்த ஜனவரி 1 ஆம் திகதி வணிக வளாகங்கள், உணவகங்கள் என மொத்தம் 34 நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.