இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய T20 அணித்தலைவராக தசுண் சானக்க நியமனம்.
லசித் மாலிங்கவுக்கு பதிலாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய T20 அணித்தலைவர்ஆக தசுண் சானக்க நியமனம்
கிரிக்கெட் உலகில் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கின்ற அணி எது என்றால் இது இலங்கை அணியானவே இருக்கிறது.
காரணம் தொடர் வெற்றிகள் பெறுவதனால் அல்ல. இலங்கை அணி தொடர்ச்சியாக தோல்விகளை தழுவிக்கொண்டு வருகிறது.
இலங்கை அணியில் இடம்பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் என அழைக்கப்படுகின்றன முரளி, சனத், மஹேல, சங்கக்கார போன்ற வீரர்கள் அணியை விட்டும் ஓய்வு பெற்றுச் சென்ற பின்னர் இலங்கை அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துக் கொண்ட வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி உலகக்கிண்ண தொடருக்குப் பின்னர் இலங்கை அணியில் நிரந்தர அணித்தலைவர் கிடையாது.
வீரர்களுக்கு ஏற்படுகின்ற உபாதையும் அதற்கு ஒரு காரணமாக சொல்லலாம். அந்த வகையில் முழு உலகிலும் ஏற்பட்ட கொ ரோ னா வை ர ஸ் தாக்கத்தின் பின்னர் இலங்கை அணி முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அடிப்படையில் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. வெற்றி பெறும் என எதிர்பார்த்தாலும் தோல்வியே கிடைத்தது. 2-0 என்ற அடிப்படையில் தோல்வி ஏற்பட்டது.
இலங்கை கிரிக்கெட் அணியானது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நிறைவு செய்திருக்கிறது. இலங்கை அணி குறித்த டெஸ்ட் தொடரை 0-2 என்ற அடிப்படையில் எழுந்துள்ள நிலையில் இரசிகர்களால் பெரிதும் விமர் சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியானது தங்களுடைய அடுத்த இருதரப்பு கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ள இலங்கை அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் பயணிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையில் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது சர்வதேச தொடரில் இலங்கை அணியின் தலைவராக துடுப்பாட்ட சகலதுறை வீரரான தசுன் சானக்க செயற்படுவார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
குறித்த இருபதுக்கு இருபது சர்வதேச தொடரில் இலங்கை அணியின் வழமையான தலைவரான லசித் மாலிங்க விளையாடமாட்டார் என்ற செய்தி வெளியாகி இருக்கின்ற நிலையிலேயே தசுன் சானக்க இவ்வாறு அணித்தலைவராக செயற்படுவார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.