விமான நிலையத்திற்கு வருவதற்கோ செல்வதற்கோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு.

ஐரோப்பிய ஒன்றித்திற்கு வெளியே இருந்து பிரான்சிற்குள் வருவதற்கோ அல்லது பிரான்சிலிருந்து வெளியே செல்வதற்கோ கடுமையான கட்டுப்பாடுகள் பரிஸ் விமான நிலையங்களில் இன்று நள்ளிரவிலிருந்து ஆரம்பமாகின்றது.
முக்கியமாக பிரான்சிலிருந்து வெளியெறும் பயணிகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. உதாரணத்திற்கு Punta Cana (République dominicaine) நோக்கி செல்லும் உல்லாச ஓய்வுப் பயணங்கள், அல்லது ஆபிரிக்கா நோக்கிய குடும்பப் பயணங்கள் போன்று பல நாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பாவிற்கு வெளியே செல்பவர்கள் தவிர்க்க முடியாத அத்தியாவசியக் காரணங்களிற்காக மட்டுமே நாட்டை விட்டு வெளியே செல்லமுடியும் என்பது மிகக் கடுமையாகக் கடைப்படிக்கப்பட உள்ளது.
இதனால் மிகக் குறைவான பயணிகளே விமானநிலையத்திற்கு வரவுள்ளதாக பரிசின் விமான நிலையங்களின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.