இலங்கைக்கு எதிராக ஐ.நாவின் நீதிக்கான போராட்டம் உக்கிரம்!
இலங்கைக்கு எதிராக ஐ.நாவின்
நீதிக்கான போராட்டம் உக்கிரம்!
ருவிட்டரிலும் கடும் தாக்கு
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கைக்கு எதிராக ருவிட்டரில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றார் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டு வரும் ருவிட்டர் போராட்டத்தில் போர்க்கால காட்சிகள் உள்ளடங்கிய வீடியோக்களும் உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடந்த கால மனித உரிமை மீறல்களைக் கவனிக்கத் தவறியதால், மீண்டும் மனித உரிமை மீறல்கள் நிகழும் அபாயம் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடும் ருவிட்டர் பதிவொன்றை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம், போர்க்கால வீடியோவுடன் வெளியிட்டுள்ளது.
குறித்த ருவிட்டர் செய்தி, இலங்கை விவகாரங்கள் தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளில் இருந்து முழுமையான விலகலாகும் என்றும், பக்கச்சார்பானது என்றும் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடம் வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது