மேல் மாகாணத்தின் 1031 பாடசாலைகள் 15 முதல் ஆரம்பம்.
மேல் மாகாணத்தின் 1031 பாடசாலைகள்
15 முதல் ஆரம்பம்.
மேல் மாகாணத்தின் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள 1031 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் உள்ள 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகளும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள 446 பாடசாலைகளில் 442 பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக குறித்த திகதியில் திறக்கப்படவுள்ளன.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த இறுதித் தீர்மானம் இவ்வார இறுதியில் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஜி.சீ.ஈ. சாதாரண தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது